மணரத்தை விளைவிக்க எண்ணப்படாத எதுவும் ஏதாவதொரு தீங்கை அது விளைவிக்கலாம். அல்லது அதைச் செய்பவரால் விளைவிக்க எண்ணப்பட்டு அல்லது அநேகமாக விளைவிக்கக்கூடும் என அதைச் செய்பவருக்குத் தெரிந்தே மற்றும் அத்தீங்iடிக அனுபவிப்பதற்கு அல்லது அத்தீங்கின் அபாயத்தை எதிர்கொள்வற்கு வெளிப்படையான அல்லது உட்கிடையான ஒரு சம்மதத்தைக் கொடுத்திருக்கிற யாரேனும் ஒரு நபருக்கு அவரின் நலனுக்காக நன்னம்பிக்கையில் அது செய்யப்பட்டத என்ற காரணத்தால் ஒரு குற்றமாக ஆகாது.
எடுத்துக்காட்டு
ஒரு வலியுடனான நோயின் கீழ் துன்பப்படும் Z என்பவருக்கு ஒரு குறிப்பிட்ட அறுவை சிகிச்ச அநேகமாக மரணத்தை விளைவிக்கும் என தெரிந்ததே ஆனால் Z இன் மரணத்தை விளைவிக்க உள்நோக்கமின்றி மற்றும் Zஇன் நலனுக்கான உள்நோக்கத்தில் A என்ற ஒரு அறுவை சிசிட்சை மருத்துவர் Zஇன் சம்மதத்துடன் Zன்மீது நன்னம்பிக்கையில் அந்த அறுவை சிகிச்சயை செய்கிறார். A எக்குற்றத்தையும் புரிந்திருக்கவில்லை.