மது போதை ஊட்டப்பட்ட ஒருவர் தான் செய்வதை இன்னதென்று பகுத்தறிய முடியாத சூழ்நிலையில் செய்யக்கூடிய எதனையும் குற்றமாக கொள்ள முடியாது. ஏனெனில் தான் செய்யும் காரியம் சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது சட்டத்திற்கு எதிரானதா என்பதனை அவரால் அப்போது அறிய முடியாது. இதில் உள்ள ஒரு முக்கியமான நிபந்தனை என்னவென்றால் மது போதையை அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக பிறர் ஊட்டி இருக்க வேண்டும். அல்லது உண்ட பொருள் போதை தர தக்கது என்பதை அவன் அறியாது உண்டு இருக்க வேண்டும்.