சட்டத்தின் மூலம் ஒரு காரியத்தை செய்ய வேண்டிய கடமை உள்ள ஒருவர் அப்படி கடமையாற்றும் பொழுது நல்லெண்ணத்துடன் ஒரு காரியத்தை அத்தகைய நல்லெண்ணத்துடன் தவறாக செய்தலும் குற்றமாகாது.
உதாரணம்:
மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஒரு போலீசார் ஒரு கூட்டத்தில் மீது துப்பாக்கி பிரயோகம் செய்கிறார். அவர் மீது எந்த குற்றமும் சாராது.
ஒரு நீதிமன்றத்திற்கு உத்திரவு பெற்ற அதிகாரிக்கு ராமனை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. அனால் அவர் தவறுதலாக ராமன் என்று நினைத்துக் கொண்டு முனியனை கைது செய்துவிட்டால் அது குற்றமாகாது.