தீர்ப்புரையில் குறிப்பிடப்பட்ட பல்வேறு குற்றங்களில் ஒன்றிற்குக் குற்றவாளியாகும் ஒரு நபருக்கு ஆனால் அந்த குற்றங்களில் எந்த குற்றத்திற்கு அவர் குற்றவாளி என்று ஐயமாக இருப்பதாக கொடுக்கப்பட்ட தீர்ப்புரையின் அனைத்து நேர்வுகளிலும் அதே தண்டனை அனைத்திற்காகவும் வகை செய்யப்படாமல் இருந்தால் எக்குற்றத்திற்காக மிகக்குறைந்த தண்டனை வகை செய்யப்பட்டிருக்கிறதோ அக்குற்றத்திற்காக குற்றம்புரிந்தவர் தண்டிக்கப்படவேண்டும்.