அபராதம் செலுத்தப்படத் தவறுகையில் அளிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் கால அளவு முடிவுறுவதற்கு முன்னர், அத்தகைய ஒரு பகுதி அபராதம் செலுத்தப்பட்டுவிட்டால் அல்லது வசூலிக்கப்பட்டுவிட்டால் செலுத்தப்பட தவறியதற்காக அனுபவித்த சிறைத்ததண்டனையின் கால அளவு, இன்னும் செலுத்ததப்படாத அபராதப் பகுதிக்கு சம அளவிற்கு குறைவில்லாமல் இருந்தால் சிறைத்தண்டனை முடிவிற்கு வர வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர் ஒரு நுறு ரூபாய்களின் ஒரு அபராதத்திற்கு மற்றும் செலுத்தத் தவறுகையில் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனைக்கு தண்டனை விதிக்கப்படுகிறார். இங்கு ஒரு மாத சிறைத்தண்டனை முடிவுறுவதற்கு முன்னர், அபராதத்தின் எழுபது ஐந்து ரூபாய்கள் செலுத்தப்பட்டுவிட்டால் அல்லது வசூலிக்கபட்டுவிட்டால், முதல் மாதம் முடிவுற்றவுடனேயே A வீடுவிக்கப்பட வேண்டும். முதல் மாதம் முடிவுறும் நேரத்தில், அல்லது A சிறைச்சாலையில் தொடர்ந்திருக்கையில் எந்தவொரு பிந்தைய நேரத்திலும் எழுத்து ஐந்து ரூபாய்கள் செலுத்தப்பட்டுவிட்டால் அல்லது வNலிக்கப்பட்டுவிட்டால் A உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சிறைத்தண்டiயின் இரண்டு மாதங்கள் முடிவுறுவதற்கு முன்னர், அபராதத்தின் ஐம்பது ரூபாய்கள் செலுத்தபடப்டுவிட்டால் அல்லது வசூலிக்கப்பட்டுவிட்டால், இரண்டு மாதங்கள் முடிவுற்றவுடனேயே A விடுவிக்கப்படவேண்டும. அந்த இரண்ட மாதங்கள் முடிவுறும் நேரத்தில் அல்லது A சிறைச்சாலையில் தொடர்ந்திருக்கையில் எந்தவொரு பிந்தைய நேரத்திலும், ஐம்பது ரூபாய்கள் செலுத்தப்பட்டுவிட்டால் அல்லது வசூலிக்கப்பட்டு விட்டால் A உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.