குற்றமானது அபராதத்துடன் மட்டுமே தண்டிக்கப்படக்கூடியதாக இருந்தால் அபராதம் செலுத்தப்படாதத் தவறுகையில் நீதிமன்றம் எந்த சிறைத்தண்டனையை விதிக்குமோ அது சாதாரணமாக இருக்க வேண்டும். மற்றும் அபராதத்தை செலுத்தத் தவறுகையில் எந்த கால அளவிற்கு குற்றம் புரிந்தவர் சிறைப்படுத்தப்பட வேண்டுமென்று நீதிமன்றம் கட்டளையிடுகிறதோ, அந்த கால அளவு பின்வரும் அளவிற்கு மிகாமல் இருக்கும் போது இரண்டு மாதங்களுக்கு மிகாத ஏதாவதொரு கால அளவிற்கு, மற்றும் அத்தொகை ஒரு நு}று ரூபாய்க்கு மிகாமல் இருக்கும்போது நான்கு மாதங்களுக்கு மிகாத ஏதாவதொரு கால அளவிற்கு மற்றும் ஏதொவதொரு பிற நேர்வில் நான்கு மாதங்களுக்கு மிகாத ஏதாவதொரு கால அளவிற்கு இருக்க வேண்டும்.