ஒரு அபராதம் செலுத்தப்பட தவறுகையில், குற்றம் புரிந்தவர் எந்தக் காலத்திற்கு சிறைப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிடுகிறதோ, அந்த காலமானது அக்குற்றம் சிறைத்தண்டனையுடன் அதே சமயத்தில் அபராத்துடன் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக இருந்ததால், அக்குற்றத்திற்காக வரையறுக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனையின் கால அளவில் நான்கில் ஒரு பகுதிக்கு மிகுதியாக இருக்கக்கூடாது.