ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் ஒரு குற்றம் புரிந்தவர் தண்டிக்கப்படக்கூடிய ஒவ்வொரு நேர்விலும் குற்றம் புரிந்ததற்கு அத்தகைய குற்றம் புரிந்தவருக்கு தண்டனையை விதிக்கும் நீதிமன்றம், அத்தகை சிறைத்தண்டனை முழுவதுமாக சாதாரணமாக இருக்க வேண்டும் அல்லது அத்தகைய சிறைத்தண்டனையின் ஏதாவதொரு பகுதி கடுங்காவலாக மற்றும் எஞ்சியுள்ளது சாதாரணமாக இருக்க வேண்டும் என்று அத்தண்டனை விதிப்பில் கட்டளையிடுவதற்கு அதற்கு அதிகாரம் உள்ளது.