சட்டப்பிரிவுகள் 54 மற்றும் 55களில “உரிய அரசாங்கம்” என்ற வெளிப்பாட்டின் பொருளானது-
(a) தண்டனைவிதிப்பானது, ஒரு மரண தண்டனை விதிப்பாக அல்லது மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகார் நீட்டிக்கப்படுகிடிற எந்தவொரு விஷயம் சம்பந்தமான ஏதாவதொரு சட்டத்திற்கெதிரான ஒரு குற்றத்திற்கானதாக இருக்கும் நேர்வுகளின்போது மத்திய அரசாங்கம்; மற்றும்
(b) தண்டனைவிதிப்பானது, (மரண தண்டனையாகவோ அல்லது அவ்வாறு இல்லாமலோ இருந்தால்) மாநில அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரம் நீட்டிக்கப்படுகிற எந்தவொரு விஷயம் சம்பந்தமான ஏதாவதொரு சட்டத்திற்கெதிரான ஒரு குற்றத்திற்கானதாக இருக்கும் நேர்வுகளின்போது, குற்றம் புரிந்தவர் எந்த மாநிலத்திற்குள் தண்டிக்கப்படுகிறாரோ, அந்த மாநில அரசாங்கம்