இச்சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் குற்றம் புரிந்தவர்கள எந்த தண்டனைகளுக்கு உள்ளாவார்களோ, அவையாவன:-
முதலாவது – மரண தண்டனை
இரண்டாவதாக – ஆயுள் சிறைத்தண்டனை
[சட்டம் 1949இன் 17. சட்டப்பிரிவு 2இன் படி, துணைப்பிரிவு "மூன்றாவதாக" என்ற வார்த்தைகள் விட்டுவிடப்பட்டது. அமலுக்கு வந்த நாள் 06.04.1949]
நான்காவதாக – சிறைத்தண்டனை இரண்டு விவரிப்புகளில் உள்ளது அவையாவன
கடுங்காவல் அதாவது கடின உழைப்புடன் கூடியது; சாதாரணமானது;
ஐந்தாவதாக – சொத்து பறிமுதல்
ஆறாவதாக – அபராதம்