ஒருவருடைய அல்லது அவர் அக்கறைக்காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது புகழுக்குத் தீங்கிழைக்கப்படும் என்று அவருக்குப் பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது செய்ய வேண்டிய செயலைச் செய்யும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்கென மிரட்டுவதை, குற்றங்கருதி மிரட்டல் என்கிறோம்.
விளக்கம்:
நாம் அக்கறை காட்டக்கூடிய ஒரு நபர் இறந்து விட்டாலும் அவருடைய புகழுக்குப் பங்கம் விளைவிக்கப்படும் என்று மிரட்டுவதும் இந்தப் பிரிவில் அடங்கும்.
உதாரணம்:
தன்மீது ஓர் உரிமையியல் வழக்கைப்போடாமல் தடுப்பதற்காக அவருடைய வீட்டை எரித்து விடுவேன் என்று மிரட்டுவது இந்தப் பிரிவின் படி குற்றமாகிறது.