தண்டனைக்குரிய குற்றத்தைப் புரிவதற்காக ஒளிந்து வீடு புகும் அல்லது வலிந்து வீடு புகும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். செய்யநினைத்த குற்றம் திருட்டாக இருப்பின், அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.