மனிதர் குடியிருப்பதற்காகப் பயன்படும் வீடு, கூடாரம் அல்லது கப்பலுக்குள் குற்றம் கருதி அத்துமீறல் செய்வதைக் குற்றம் கருதி வீடு புகுதல் என்று சொல்லப்படும்.
வழிபாட்டுக்கு உரிய ஒரு கூட்டத்துக்குள் அல்லது பண்டங்களைப் பாதுகாக்க வைத்திருக்கும் கட்டடத்துக்குள் குற்றங்கருதி அத்துமீறலையும் குற்றங்கருதி வீடு புகுதல் என்றே குறிக்கப்படும்.
விளக்கம்:
அத்துமீறுவோரின் உறுப்பின் ஒரு பிரிவு உள்ளே நுழைந்திருந்தாலும் குற்றங்கருதி வீடு புகுதல் என்ற மாற்றம் நடைபெற்றதாகக் கொள்ளப்படும்.