குற்றம் புரியவேண்டும், மிரட்ட வேண்டும், அவமதிக்கவேண்டும் அல்லது தொல்லை தரவேண்டும் என்ற கருத்துடன் ஒருவருக்குச் சொந்தமான அல்லது அவருடைய வசத்தில் உள்ள இடத்தில் நுழைவதும்,
(அல்லது)
சட்டவிரோதமாக அந்த இடத்துக்குள் நுழைந்த பின்னர், குற்றம் புரியவேண்டும், மிரட்ட வேண்டும், அவமதிக்க வேண்டும் அல்லது தொல்லை தர வேண்டும் என்ற கருத்துடன் சட்டவிரோதமாக அந்த இடத்தில் இருப்பதும், குற்றங்கருதி அத்துமீறல் என்று சொல்லப்படும்.