ஒருவரைப் போல் நடித்து அல்லது ஒரு நபருக்குப் பதிலாக மற்றொரு நபரைக் காட்டி அல்லது அந்த நபர் வேறு ஓர் ஆள் அல்லது நபர் என்று உண்மைக்கு புறம்பாகக்கூறி அதன் மூலம் வஞ்சிப்பதை ஆள்மாறாட்டம் செய்து வஞ்சித்தல் என்று குறிப்பிடப்படும்.
விளக்கம்:
யாரைப்போல் ஆள்மாறாட்டம் செய்கிறோமோ அந்த நபர் உண்மையில் உள்ளவரா இருப்பினும் கற்பனை நபராக இருப்பினும் அப்படி ஆள்மாறாட்டம் செய்யும்பொழுது இந்தக் குற்றம் புரியப்படுகிறது.
உதாரணம்:
அ) ஒரு பெரிய பணக்காரனுடைய பெயரும் தன் பெயரும் ஒன்றாக இருக்கும்போது, தான் அந்த பணக்காரர் என்று சொல்லும்போது ஆள்மாறாட்டம் செய்து வஞ்சிக்கும் குற்றம் புரியப்படுகிறது.
ஆ) இறந்துவிட்டவரைப் போல நடிக்கும்போது ஆள்மாறாட்டம் செய்யப்படுகிறது.