ஒரு குற்றமுறு செயலைப் புரிவதில் பல்வேறு நபர்கள் ஈடுபட்டிருக்கும்போது அல்லது சம்பந்தப்பட்டிருக்கும்போது அச்செயலின் மூலம் அவர்கள் வௌ;வேறான குற்றங்களுக்கு குற்றவாளிகள் ஆகலாம்.
எடுத்துக்காட்டு
A என்பவர் Z என்பவரை அவர் கொல்வதானது, கொலையாகாத குற்றமுறு மனித மரணம் மட்டுமே ஆகிற அத்தகைய கடுமையான ஆத்தரமூட்டப்பட்ட சூழ்நிலைகளின் கீழ் Zஐத் தாக்குகிறார். Zன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கும் B மற்றும் அவரைக் கொல்லும் உள்நோக்கத்தில் மற்றும் ஆத்திரமூட்டப்படுதலுக்கு உள்ளாகாதிருக்கும்போது Zஐ கொல்வதில் Aக்கு உதவுகிறார். இங்கு A மற்றும் B ஆகிய இருவரும் ணன் மரணத்தை விளைவிப்பதில் ஈடுபட்டிருந்தாலும் கூட B கொலைக் குற்றவாளியாகிறார். மற்றும் A குற்றமுறு மனித மரணத்திற்கு மட்டுமே குற்றவாளியாகிறார்.