பல்வேறு செயல்களின் மூலமாக ஒரு குற்றம் புரியப்படும்போது, அச்செயல்களில் ஏதாவது ஒன்றைத் தனியாகவோ அல்லது யாரேனும் பிற நபருடன் கூட்டாகவோ செய்வதால், அக்குற்றம் புரிகையில் உள்நோக்கத்துடன் ஒத்துழைக்கும் எந்தவொரு நபருமு; அக்குற்றத்தைப் புரிகிறார்.
எடுத்துக்காட்டுகள்
(ய) A மற்றும் B, தனித்தனியாக மற்றும் பல்வேறு காலங்களில் Z என்பவருக்குச் சிறிய அளவிலான நஞ்சிகைக் கொடுத்து, அவரைக் கொலை செய்ய உடன்படுகின்றனர். உடன்படிக்கையின்படி, A மற்றும் B, Zஐ கொலைச் செய்யும் உள்நோக்கத்துடன் நஞ்சைக் கொடுக்கின்றனர். Z அவ்வாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட பல்வேறு அளவுகளிலான நஞ்சின் விளைவால் மரணமடைகிறார். இங்கு, A மற்றும்B கொலையைப் புரியும் உள்நோக்கத்தில் ஒத்துழைக்கின்றனர். மற்றும் மரணத்தை விளைவிக்கின்ற ஒரு செயலை அவர்களில் ஒவ்வொருவரும் செய்வதால், அவர்களுடைய செயல்கள் தனித்தனியாக இருந்தாலும், அவர்கள் இருவரும் குற்றத்திற்கு குற்றவாளியாவார்கள்.
(b) A மற்றும் B இணை சிறை அலுவலர்களாக உள்ளார்கள், மற்றும் அதனால் 6 மணி நேரங்களுக்கு ஒரு தடவையில் மாறிமாறி Z என்ற ஒரு சிறைவாசியின் காவல் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். A மற்றும் Bஇ Zஇன் மரணத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தில், அவர்கள் ஒவ்வொருவாpன் பணி நேரத்தின்போது, Zக்கு கொடுக்கும் நோக்கத்திற்காக அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்த உணவை சட்டப்பூர்வமற்ற முறையில் கொடுக்காமல் விட்டுவிடுதலால், அவ்விளைவை ஏற்படுத்த தெரிந்தே ஒத்துழைக்கின்றனர். Z பசியினால் மரணமடைகிறார். A மற்றும் B ஆகிய இருவரும் Zன் கொலைக்கு குற்றவாளியாவார்கள்.
(c) A என்ற ஒரு சிறை அலுவலர், Z என்ற சிறைக் கைதயின் காவல் பொறுப்பைக் கொண்டிருக்கிறார். Zஇன் மரணததை விளைவிக்கும் உள்நோக்கத்தில், Zக்கு உணவை சட்டப்பூர்வமற்ற முறையில் கொடுக்காமல் A விட்டுவிடுகிறார். அதன் விளைவால் Z அவரது பலத்தை அதிகமாக இழந்துவிடுகிறார். ஆனால் அந்த பட்டினியானது அவரது மணரத்தை விளைவிக்கப் போதுமானதாக இல்லை.ட A அவரது பணியிலிருந்து நீக்கப்படுகிறார். மற்றும் B அவருக்குப் பின் பொறுப்பேற்கிறார். B A உடன் வஞ்சகக் கூட்டு அல்லது ஒத்துழைப்பு எதுவுமின்றி Zன் மரணத்தை அவர் அதனால் அநேகமாக விளைவிக்கக்கூடும் என தெரிந்தே Zக்கு உணவு கொடுப்பதை சட்டபூர்வமற்ற முறையில் செய்யாமல் விட்டுவிடுகிடிறார். Z பசியினால் மரணமடைகிறார். B கொலைக்குற்றவாளியாகிறார். ஆனால் A, B உடன் ஒத்துழைக்காததால் A கொலையை புரிவதற்கான ஒரு முயற்சி மட்டுமே குற்றவாளியாகிறார்.