எவரேனும், ஏதாவதொரு விலங்கை அவரது உடமையில் வைத்திருக்கும்போது, அத்தகைய விலங்கினால் மனித உயிருக்கு ஏதாவதொரு ஆபத்து விளைவிக்கப்படக்கூடும், அல்லது கொடுங்காயம் விளைவிக்கப்படலாமென்ற ஏதாவதொரு ஆபத்திற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.