எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கிற, அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாமென்ற தீ அல்லது ஏதாவதொரு தீப்பற்றக்கூடிய பொருள் சம்பந்தமாக, அத்தகைய தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருள் மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால்,
ஆறுமாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.