எவரேனும், ஏதாவதொரு செயலைச் செய்வதனால், அல்லது அவரது உடமையில் அல்லது அவரது பொறுப்பிலுள்ள ஏதாவதொரு சொத்தை ஒழுங்குபடுத்தாமல் விடுதலினால், ஏதாவதொரு பொதுப்பாதையில் அல்லது பொதுநீர்வழிப் பாதையில் யாரேனும் ஒரு நபருக்கு அபாயம் அல்லது தீங்கை விளைவித்தால், ரூபாய் இருநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப்பட வேண்டும்.