எவரேனும்.மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம், அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஏதாவதொரு நீர்வழிக்கலத்தை செலுத்தினால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.