மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓடுவது சவாரி செய்வதும் குற்றமாகும், இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். ஒரு பொதுவழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் ஓட்டுதல் அல்லது செலுத்துதல்எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம் அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் ஏதாவதொரு வாகனத்தை ஏதாவதொரு பொது வழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஓட்டினால் அல்லது செலுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.