எவரேனும், சாதாரணமாக குடியிருக்கும் அல்லது அருகில் வணிகத்தைச் செய்யும் அல்லது ஒரு பொதுவழியாகக் கடந்து செல்லும் ஏதாவதொரு இடத்தில் அங்குள்ள நபர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்குமாறு சுற்றுச்சூழலை தன்னிச்சையாக மாசுபடுத்தினால், ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் தண்டிக்கப் படவேண்டும்.