எவரேனும், ஏதாவதொரு மருந்து அல்லது மருத்துவத் தயாரிப்பில் அதன் வீரியத்தைக் குறைக்கும் அத்தகைய ஒரு முறையில், அல்லது அத்தகைய மருந்து அல்லது மருத்துவ தயாரிப்பின் செயல்பாட்டு முறையை மாற்றி, அதை கெடுதி விளைவிக்குமாறு உள்நோக்கத்துடன் செய்து அது விற்கப்பட அல்லது பயன்படுத்தப்பட, அல்லது அத்தகைய கலப்படம் செய்யப்படாததுபோல், அதனை ஏதாவதொரு மருந்து நோக்கத்திற்காக அநேகமாக விற்பனை செய்யப்பட அல்லது பயன்படுத்தலாமென்று தெரிந்தே, கலப்படம் செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.