எவரேனும், உணவு அல்லது பானப்பொருளாக விற்கப்பட அல்லது அத்தகைய பொருளை உணவாக அல்லது பானமாக அநேகமாக விற்கப்படலாமென்று தெரிந்தே எண்ணப்பட்டு, ஏதாவதொரு உணவு அல்லது பானப் பொருளில் கலப்படம் செய்து, அத்தகைய உணவு அல்லது பானப்பொருளை கேடு விளைவிக்கும்படி செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.