எவரேனும், உயிருக்கு ஆபத்தான ஏதாவதொரு தொற்றுநோயை அநேகமாக பரப்பக்கூடிய மற்றும் பரப்பக்கூடுமென்று அவருக்குத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கிற தீய எண்ணத்திலான ஏதாவதொரு செயலைச் செய்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.