எவரேனும், உயிருக்கு ஆபத்தான ஏதாவதொரு நோயைத் தொற்றுதலால் அநேகமாக பரப்பும் என்றிருக்கிற மற்றும் அவருக்கு தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமிருக்கிற சட்டத்துக்குப் புறம்பான அல்லது கவனக்குறைவான ஏதாவதொரு செயலைச் செய்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.