பொது மக்களுக்கு அல்லது அருகில் தெரியும் சொத்தில் வசிக்கும் அல்லது இருக்கும் பொதுவான மக்களுக்கு, ஏதாவதொரு பொதுவான தீங்கு, அபாயம், அல்லது எரிச்சலை விளைவிக்கும் அல்லது ஏதாவதொரு பொது உரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு உள்ள நபர்களுக்கு தீங்கை, தடையை, அபாயத்தை அல்லது எரிச்சலை கட்டாயமாக விளைவிக்கக்கூடிய ஏதாவதொரு செயலைச் செய்யும் அல்லது சட்டவிரோத செய்வன செய்யாமை குற்றம் புரியும் ஒரு நபர், பொதுத் தொல்லை புரிந்த குற்றவாளியாகிறார்.
ஏதாவதொரு வசதி அல்லது அனுகூலத்தை விளைவிக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு சாதாரணத் தொல்லை மன்னிக்கப்படலாகாது.