எவரேனும், போலியானது என அவருக்குத் தெரிந்த எடை தெரிவிப்பதற்கான ஏதாவதொரு உபகரணத்தை, அல்லது ஏதாவதொரு எடையை, அல்லது ஏதாவதொரு நீட்டல் அளவை அல்லது கொள்ளல் அளவையை, அது உண்மையானது போன்று பயன்படுத்தும் பொருட்டு அல்லது அது உண்மையானதுபோன்று பயன்படுத்தப்படலாமென்று தெரிந்தே, தயாரித்தால், விற்றால் அல்லது தீர்வு செய்தால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.