எவரேனும், மோசடியாக அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்த வேண்டுமென்றே உள்நோக்கத்துடன், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையின்மீது, அது பயன்படுத்தப்பட்டு விட்டது என்பதை உணர்த்தும் நோக்கத்திற்காக இடப்பட்டுள்ள அல்லது பதிக்கப்பட்டுள்ள ஏதாவதொரு குறியை அழித்தால் அல்லது அகற்றினால், அத்தகைய குறி அழிக்கப்பட்ட அல்லது அகற்றப்பட்ட ஏதாவதொரு அத்தகைய முத்திரையை தெரிந்தே அவரின் உடமையில் வைத்திருந்தால் அல்லது விற்றால் அல்லது தீர்வு செய்தால் அல்லது பயன்படுத்தப்பட்டுவிட்டது என அவருக்கு தெரிந்த ஏதாவதொரு முத்திரையை விற்றால் அல்லது தீர்வு செய்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.