எவரேனும், நாணயத்தின் பொருட்டு உட்ப்பிரிவு 246 அல்லது 248ஆகிய ஏதாவதொன்றில் விவரிக்கப்பட்டுள்ள குற்றம் புரியப்பட்டுள்ளதை உடமையில் வைத்திருந்து, உடமைக்கு வந்த நேரத்திலேயே அத்தகைய நாணயத்தின் பொருட்டு அத்தகைய குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி செய்யப்படலாமென்ற உள்நோக்கத்துடன் வைத்திருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.