போலி நாணயங்களை உருவாக்குவதற்கான இயந்திரங்கள், வார்ப்புகள் கருவிகள், அவற்றின் பாகங்கள் ஆகியவற்றைத் தயாரிப்பதும், பழுது பார்ப்பதும், விற்பது, வாங்குவது ஆகியவையும் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். நாணயத்தை போலியாகத் தயாரிப்பதற்குண்டான உபகரணத்தைச் செய்தல் அல்லது விற்றல்எவரேனும், நாணயத்தை போலியாகத் தயாரிக்கும் நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்காக அல்லது அவ்வாறு பயன்படுத்தலாமென்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, தயாரித்தால் அல்லது பழுது நீக்கினால், அல்லது தயாரிப்பு அல்லது பழுது நீக்குதல் செய்முறையின் ஏதாவதொரு பகுதியைச் செய்தால், அல்லது ஏதாவதொரு வார்ப்பு அல்லது உபகரணத்தை வாங்கினால், விற்றால் அல்லது கொடுத்தால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.