போலி இந்திய நாணயங்களை உருவாகும் குற்றம். அப்படி உருவாக்குவதற்கான வேலையின் எந்தக் கூட்டத்தில் ஈடுபட்டிருந்தாலும் அது குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். இந்திய நாணயத்தை போலியாகத் தயாரித்தல்எவரேனும், இந்திய நாணயத்தை போலியாகத் தயாரித்தால், அல்லது போலியாகத் தயாரிக்கும் செய்முறையின் ஏதாவதொரு பகுதியைத் தெரிந்தே செய்தால் ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.