போலிநாணயங்கள் உருவாக்குவது குற்றம். அப்படி உருவாக்குவதற்கான வேலையின் எத்தகைய கட்டத்தையும், தெரிந்துசெய்வதும் குற்றம். இந்தக் குற்றம் புரிந்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
விளக்கம்:
ஏமாற்றவேண்டும் என்ற கருத்துடன் அல்லது ஏமாற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவுடன் ஓர் உண்மையான நாணயத்தைக்கூட வேறொரு (மதிப்புள்ள) நாணயத்தைப்போல் தோன்றும்படி செய்வது இந்தக் குற்றத்தைச்சாறும். நாணயத்தை போலியாகத் தயாரித்தல்எவரேனும், நாணயத்தை போலியாகத் தயாரித்தால் அல்லது போலியாகத் தயாரிக்கும் செய்முறையின் ஏதாவதொரு பகுதியைத் தெரிந்தே செய்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
விளக்கம்:-மோசடியாகச் செய்யும் உள்நோக்கத்துடன் அல்லது அவ்வாறு செய்தால் அதனால் மோசடி செய்யப்படக்கூடுமென்று தெரிந்தே, ஓர் உண்மையான நாணயத்தை, ஒரு மாறுபட்ட நாணயம் போன்று தோற்றமளிக்கச் செய்யும் ஒரு நபர், இக்குற்றத்தைப் புரிகிறார்.