அரசாங்கம் அல்லது அரசாங்கத்தின் அதிகாரம் பெற்று முத்திரையிட்டு வழங்கப்பட பணமாக பயன்படுத்தப்படும் உலோகம் நாணயம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
இந்திய நாணயம்
Indian Coin
இந்திய நாணயம் என்பது இந்திய அரசாங்கத்தால் முத்திரையிடப்பட்டு பணமாக உபயோகப்படுத்துவதற்காக வழங்கப்படும் உலோகமாகும். அத்தகைய உலோகத்தை பணமாக உபயோகப்படுத்துவதை கைவிட்ட பிறகும் கூட இந்த அத்தியாயத்தின் படி அதனை இந்திய நாணயம் என்று குறிப்பிடப்படுகிறது.
1. பண்டமாற்று நாணயமாக வழங்கப்பட்ட சோழிகள் நாணயம் ஆகாது.
2. பணமாக உபயோகப்படுத்தப்பட்டாலும் அரசாங்க முத்திரை இடப்படாத பித்தளைக் கட்டிகளை நாணயமாகக் கொள்ள முடியாது.
3. விருதுச் சின்னங்களை (மெடல்கள்) நாணயமாக கொள்ள முடியாது. ஏனெனில், அவற்றைப் பணமாகப் பயன்படுத்துவதற்காக அளிப்பதில்லை.
4. (கிழக்கிந்திய) கம்பெனியின் ரூபாய் என்று குறிப்பிடப்படுவதும் இந்திய நாணயமாகும்.
5. முன்பு இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் பேரில் பணமாக உபயோகப்படுத்தப்பட்டு வந்த ப்ரூக்காபாத் ரூபாய் இப்பொழுது புழக்கத்தில் இல்லை. இருப்பினும் அதையும் இந்திய நாணயம் என்றே கொள்ள வேண்டும். நாணயம் வரையரை"நாணயம்" என்பது ஏதாவது அரசாங்கத்தினால், அல்லது இறையாண்மை அதிகார அமைப்பின் அதிகாரத்தால் பணமாக பயன்படுத்தப்பட்ட முத்திரையிடப்பட்டு மற்றும் வெளியிடப்பட்டு மற்றும் தற்போது அவ்வாறு பயன்படுத்தப்படும் உலோகமாகும்.
இந்திய நாணயம்:-
இந்திய நாணயம் என்பது, பணமாகப் பயன்படுத்தப்படுவதற்காக, இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தினால், முத்திரையிடப்பட்டு மற்றும் வெளியிடப்பட்ட உலோகமாகும்;மற்றும் இந்த அத்தியாயத்தின் நோக்கங்களுக்காக, அவ்வாறு முத்திரையிடப்பட்டு மற்றும் வெளியிடப்பட்ட உலோகமானது, அது பணமாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதைக் கருத்தில் கொள்ளாமல், அது இந்திய நாணயமாகவே தொடர்ந்து இருக்கும்.
எடுத்துக்காட்டுகள்
(a ) சோழிகள் நாணயம் அல்ல.
(b )முத்திரையிடப்படாத செப்புக் கட்டிகள், பணமாகப் பயன்படுத்தப் பட்டாலும், நாணயம் அல்ல.
(c )பதக்கங்கள், அவைகள் பணமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்று எண்ணப்படவில்லை என்பதனால் நாணயம் அல்ல.
(d ) நிறுவனத்தின் ரூபாயாக பெயரிடப்பட்ட உலோகம், இந்திய நாணயம் ஆகும்.
(e ) இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின்கீழ் முன்பு பணமாகப் பயன்படுத்தப்பட்ட "ஃபருக்கபாத் ரூபாய்" அவ்வாறு தற்போது அது பயன்படுத்தவில்லை எனினும், அது இந்திய நாணயம் ஆகும்.