எவரேனும், ஏதாவதொரு நீதிமுறைச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும் யாரேனும் ஒரு பொதுப்பணியாளர் பணியாற்றும்போது, அத்தகைய பொதுப்பணியாளரை உள்நோக்கத்துடன் ஏதாவதொரு அவமதிப்பு செய்தால் அல்லது ஏதாவதொரு குறுக்கீடு விளைவித்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான சாதரணசிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.