ஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், சட்டப்பிரிவு 221, சட்டப்பிரிவு 222 அல்லது சட்டப்பிரிவு 223 இல் அல்லது தற்போது அமலிலிருக்கின்ற ஏதாவதொரு பிற சட்டத்தில் குறிப்பிட்டு கூறப்படாத, ஏதாவதொரு வழக்கில் தொடர்புடைய யாரேனும் ஒரு நபரைக் கைது செய்ய, அல்லது காவலில் வைக்க கடமைப்பட்டிருக்கும் போது, அந்நபரை கைது செய்யத் தவறினால் அல்லது காவலிலிருந்து தப்பிக்க எதிர்ப்பின்மையோடு இருந்தால் பின்வருமாறு தண்டிக்கப்பட வேண்டும்.
(a ).அவர் அதை உள்நோக்கத்துடன் செய்தால் மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்;மற்றும்
(b ).அவர் அதை கவனக்குறைவுடன் செய்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.