குற்றம் சாட்டப்பட்டுள்ள அல்லது தண்டிக்கப்பட்டுள்ள அல்லது விசாரணைக்கு காலத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு நபரைக் காவலில் காக்கும் பொறுப்புள்ள ஒரு பொது ஊழியர் தம் அஜாக்கிரதையின் காரணமாக அந்தக் குற்றவாளி காவலிலிருந்து தப்பி ஓடிவிடும்படி விட்டு விட்டால் அந்தப் பொதுஊழியருக்கு 2 ஆண்டுகள் வரை வெறுங்காவல் அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். பொதுப் பணியாளரின் கவனக் குறைவால் அடைப்பு காவலிலிருந்து அல்லது காவலிலிருந்து தப்பிச் செல்லவிடல்ஒரு பொதுப்பணியாளராக இருக்கின்ற எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது ஏதாவதொரு குற்றத்திற்குத் தண்டிக்கப்பட்ட அல்லது காவலுக்கு சட்டப்படி அனுப்பப்பட்ட யாரேனும் ஒரு நபரை, அடைப்புக் காவலில் வைக்க கடமைப்பட்டிருக்கும்போது அத்தகைய நபர் அடைப்புக் காவலிலிருந்து தப்பிச் செல்ல கவனக்குறைவாக இருந்தால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சாதாரண சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.