பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், ஒரு நீதிமன்றச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும், ஏதாவதொரு அறிக்கையை, உத்தரவை, தீர்ப்பை அல்லது தீர்மான முடிவை, அவைகள் சட்டத்திற்குப் புறம்பானதென்று அவருக்குத் தெரிந்தும், அவற்றை நேர்மையற்ற முறையில் அல்லது தீய நோக்கத்தில் தாக்கல் செய்தால் அல்லது தீர்மானமாகக் கூறினால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.