பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில், ஏதாவதொரு பதிவேட்டை அல்லது பிற எழுத்துருவைத் தயாரிக்க பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளபோது, பொதுமக்களுக்கோ அல்லது யாரேனும் ஒரு நபருக்கோ இழப்பு அல்லது தீங்கு விளைவிக்க, அல்லது அதன்மூலம் அநேகமாக விளைவிக்கலாமென்று தெரிந்தே உள்நோக்கத்துடன், அல்லது அதன்மூலம் சட்டப்படியான தண்டனையிலிருந்து ஒரு நபரை காப்பாற்ற அல்லது அநேகமாக காப்பாற்றப்படலாமென்று தெரிந்தே உள்நோக்கத்துடன், அல்லது ஏதாவதொரு சொத்தை பறிமுதல் செய்யப்படுவதிலிருந்து அல்லது அச்சொத்தை சட்டப்படியான பொறுப்பிற்கு உள்ளாக்குவதிலிருந்து உள்நோக்கத்துடன் காப்பாற்ற அல்லது அதனால் அவர் அநேகமாக காப்பாற்றலாமென்று தெரிந்தே, அப்பதிவேட்டை அல்லது எழுத்துருவை, அவருக்குத் தெரிந்தவரை அவைகள் தவறானது என்ற முறையில் ஏற்படுத்தினால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.