எவரேனும், சட்டப்படியான தண்டனையிலிருந்து யாரேனும் ஒரு நபரை உள்நோக்கத்துடன் காப்பாற்ற அல்லது அதனால் அவர் அநேகமாக காப்பாற்றப்படக் கூடும் என தெரிந்தே, அல்லது அடைய வேண்டிய தண்டனையிலிருந்து ஒரு குறைந்த தண்டனையைப் பெறுவதற்காக அல்லது உள்நோக்கத்துடன் ஏதாவதொரு சொத்தை பறிமுதலிலிருந்தோ அல்லது சட்டப் படியான பொறுப்பிற்கு உள்ளாக்குவதிலிருந்தோ காப்பாற்றும் அல்லது அவர் அதனால் அதை அநேகமாக காப்பாற்றக்கூடும் என தெரிந்தே, ஒரு பொதுப் பணியாளராயிருக்கின்றவர் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று இருக்கின்ற சட்டப்படியான ஏதாவதொரு கட்டளைக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருந்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன்.அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.