எவரேனும், ஏதாவதொரு சொத்தை அல்லது அதிலுள்ள ஏதாவதொரு ஆதாய உரிமையை, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தால் அல்லது பிற தகுதி வாய்ந்த அதிகார அமைப்பினால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு தண்டணைவிதிப்பின் காரணமாக அல்லது அத்தகைய தண்டணைவிதிப்பு வழங்கப்படலாமென்று தெரிந்தே ஒரு பறிமுதல் செய்யப்பட்டு, அல்லது விதிக்கப்பட்ட ஒரு அபராதத்தை ஈடு செய்யும் வகையில் ஒரு கைப்பற்றப்பட்டு எடுக்கப்படுதலை அல்லது ஒரு உரிமையியல் வழக்கில் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றம் வழங்கிய அல்லது வழங்கப்படலாமென்ற ஒரு உரிமையியல் தீர்ப்பாணை அல்லது உத்தரவின்பேரில் அச்சொத்து அல்லது அதிலுள்ள ஆதாய உரிமை எடுக்கப்படலாமென்ற, உள்நோக்கத்துடன் தடுப்பதற்காக, அத்தகைய சொத்து அல்லது அதன்மீதான ஆதாய உரிமையின் மீது தனக்கு அதில் உரிமையில்லை அல்லது சரியான உரிமை கோர முடியாது எனத் தெரிந்தே, ஏதாவதொரு சொத்து அல்லது அதன்மீதான ஏதாவதொரு ஆதாய உரிமையை சூழ்ச்சி செய்து, மோசடியாக ஏற்றுக்கொண்டால், பெற்றால் அல்லது உரிமை கோரினால் இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.