எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கின்றது என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்கு காரணமாயிருக்கும்போது, அக்குற்றம் பொருட்டான ஏதாவதொரு தகவலைத் தர சட்டப்படி கடமைப்பட்டிருக்கும்போது, உள்நோக்கத்துடன் தராதிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.