எவரேனும், ஏதாவதொரு நீதிபரிபாலன நீதிமன்றம் அல்லது யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் அல்லது பிறநபர், ஏதாவதொரு பொருண்மை சம்பந்தமாக சாட்சியத்தைப் பெற சட்டப்படி கடமைப்பட்டிருக்கும்போது அல்லது அதிகாரம் கொண்டிருக்கும்போது அவர் அளித்த அல்லது அடிக்கையொப்பமிட்ட ஏதாவதொரு சாற்றுரையில் ஏதாவதொரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தால் மற்றும் அளிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட சாற்றுரையின் முக்கிய நோக்கத்தின் ஏதாவதொரு பொருள் பொய்யென அவருக்குத் தெரிந்தோ அல்லது நம்பியோ அல்லது உண்மையானதென நம்பாமலோ அளித்தால் அவர் பொய்சாட்சியம் அளித்ததுபோலவே, அதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.