ஒரு பொது ஊழியரை தன்னுடைய கடமையை செய்ய முடியாமல் தடுத்தால் மூன்று மாதங்களுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது 500 ரூபாய்க்கு உட்பட்ட அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் (353, 332, 333 IPC). பொதுப் பணிகளை நிறைவேற்றுகையில் பொதுப் பணியாளரைத் தடுத்தல்எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரை அவரின் பொதுப்பணிகளை நிறைவேற்றுகையில் தன்னிச்சையாகத் தடுத்தால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.