எவரேனும் ஒரு சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பால் சட்டப்படி கட்டுப்பட்டு, ஏதாவதொரு பொருளில், யாரேனும் ஒரு பொதுப் பணியாளரிடமோ அல்லது அத்தகைய சத்தியப் பிரமாணம் அல்லது உறுதிமொழியை செய்து வைக்க அதிகாரம் கொண்ட பிற நபரிடமோ உண்மையைக் கூற வேண்டியவர், அத்தகைய பொதுப்பணியாளரிடமோ அல்லது மேற்கூறப்பட்டவாறு உள்ள பிற நபரிடமோ, அப்பொருளின்மீது பொய்யானது என அவருக்குத் தெரிந்தே அல்லது நம்பியோ அல்லது அது உண்மையானது என்று நம்பாமலோ, ஏதாவதொரு பொய்யான வாக்குமூலத்தை அளித்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.