எவரேனும் ஏதாவதொரு வாக்குமூலத்தில் ஒருவரை கையொப்பமிடப் பணிக்க சட்டப்படி அதிகாரம் கொண்ட தகுதிவாய்ந்த ஒரு பொதுப்பணியாளரால், அவ்வாக்குமூலத்தில் கையொப்பமிடப் பணிக்கப்படும்போது, தன்னால் கொடுக்கப்பட்ட ஏதாவதொரு வாக்குமூலத்தில் அவர் கையொப்பமிட மறுத்தால், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஐநூறு வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.