எவரேனும், யாரேனும் ஒரு பொதுப்பணியாளரிடம், ஏதாவதொரு பொருள் குறித்து உண்மையைக் கூற சட்டப்படி கடமைப்பட்டுள்ளபோது அத்தகைய பொதுப் பணியாளர் தான் பொதுப் பணியாளர் என்ற முறையில், அத்தகைய பொதுப்பணியாளரின் சட்டப் படியான அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது அப்பொருளைச் சார்ந்த, அவரிடம் கட்டாயப்படுத்தப்பட்ட ஏதாவதொரு கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரண சிறைத்தண்டணையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.