எவரேனும், யாரேனும் ஒரு பொதுப் பணியாளர் என்ற முறையில், ஒரு அழைப்பாணை, அறிவிப்பு, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு ஆகியவற்றை வெளியிட, சட்டப் படி அதிகாரம் கொண்ட அத்தகைய பொதுப் பணியாளர் பிறப்பிக்கும் அவற்றிற்குக் கீழ்ப்படிந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில், தான் நேரடியாகவோ அல்லது ஒரு முகவர் மூலமாகவோ முன்னிலையாக சட்டப்படி கடப்பாடு கொண்டிருக்கையில், உள்ளநோக்கத்துடன் அவ்விடத்தில் அல்லது அந்நேரத்தில் ஆஜராகத் தவறினால் அல்லது ஆஜராக கடப்பாடு கொண்ட அவ்விடத்திலிருந்து சட்டப் படி வெளியேற வேண்டிய நேரத்திற்கு முன்பாகவே வெளியேறினால்,
ஓரு மாதம் வரை நீட்டிக்கக் படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஐநூறு ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
அல்லது அவ்வழைப்பாணை, அறிவிக்கை, உத்தரவு அல்லது பொது அறிவிப்பு, ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில், தான் நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாகவோ ஆஜராவதற்காக இருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சாதாரணச் சிறைத்தண்டணையுடன் அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டுகள்
(a ).கொல்கத்தா உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட நீதிப்பேராண்மைக்குக் கீழ்ப்படிந்து, அந்நீதிமன்றம் முன்பு முன்னிலையாக சட்டப்படி கடமை கொண்டுள்ள A என்பவர் உள்நோக்கத்துடன் அவ்வாறு முன்னிலையாகத் தவறுகிறார்.இச்சட்டப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்தவராகிறார்.
(b ).ஒரு மாவட்ட நீதிபதி பிறப்பித்த அழைப்பாணையின்படி அதற்கு கீழ்ப்படிந்து, ஒரு சாட்சியாக அந்த மாவட்டநீதிபதி முன்பு முன்னிலையாகக் கடமைப்பட்ட A என்பவர் உள்நோக்கத்துடன், அவ்வாறு முன்னிலையாகத் தவறுகிறார்.இச்சட்டப் பிரிவின்படி வரையறுக்கப்பட்டுள்ள குற்றத்தை A புரிந்தவராகின்றார்.