எவரேனும் குற்ற விசாரணை முறைச் சட்டம், 1973 இன் சட்டப்பிரிவு 82இன் உட்பிரிவு (1)இன் கீழ் வெளியிடடப்பட்ட ஒரு பிரகடனத்தில் கோரப்பட்டுள்ளவாறு, குறிப்பிட்ட இடத்தில் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் முன்னிலையாகத் தவறினால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராததுடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அச்சட்டப்பிரிவின் உட்ப்பிரிவு(4)இன் கீழ் அவரை ஒரு பிரகடனப்படுத்தப் பட்ட குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் போது அவர் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கும் உள்ளாக்கப்படவும் வேண்டும்.